2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கு பரவக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த மூவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – சம்மாந்துறை, விளினையடி பிரதேசத்தில் வடிகானுக்குள் வீட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்ததோடு, டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 03 நபர்களுக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தால்,  தலா ஆயிரம் ரூபாய் அபராதம் நேற்று (17) விதிக்கப்பட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

வீட்டு கழிவு நீரை தவறான முறையில் வடிகானுக்குள் அகற்றியதால், அப் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசி வருவதுடன், டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் அவ்விடங்கள் காணப்படுவதாகவும் பொது மக்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்ததா அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து  மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது வடிகானுக்குள் கழிவு நீரை அகற்றிய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, இவ் வழக்கு விசாரணை நேற்று(17) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒவ்வொருவருக்கம் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் கூறினார்.

அத்துடன் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கெதிராக எதிர்வரும் 24ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்படயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .