2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நீக்கப்படும்

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளனி மற்றும் பௌதீக வளக் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம நடவடிக்கை எடுத்துள்ளாரென, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.ஏ.அஹமட் முனாசுதீன் இன்று (24) தெரிவித்தார்.

வைத்தியசாலை அபிவிருத்தித் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோருடன், கிழக்கு மாகாண சபை ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கலந்துரையாடலிலே, வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளனி பற்றக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறைகளை தீர்த்து வைப்பதற்கான ஆளுநர் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு, ஆளுநரின் செயலாளரால் உடனடியாகத் தீர்வு காணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அத்துடன், விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதி வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது,  வாடகை அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் படியும் அதற்கான அனுமதியை தான் வழங்குவதாகவும் ஆளுநர் வாக்குறுதியளித்துள்ளார்.

சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.எச்எம்.அன்சார், பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ.எல்.மனாப் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .