2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மகஜர் அனுப்பிவைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பை திருத்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டீ சில்வா ஆகியோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாகாணத்திலும் மத்திய அரசிலும் மொழி ரீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவதில்லை என்றும், கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் இவ்வாறு ஆடசேர்ப்பு செய்ய முனைவது, இன ரீதியான ஆட்சேர்ப்பின் மறுவடிவமாகும் என்றும் இது பிரிவினையை தூண்டுகின்ற ஒரு செயலாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் கலைக்கப்பட்டு, அரசியல் ரீதியான முறையான நிருவாகம் இல்லாத இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடக்க எத்தனிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இவ்விடயம் தொடர்பில் முறையான தீர்வொன்று கிடைக்காத பட்சத்தில், நாங்கள் நீதி மன்றம் செல்ல வேண்டி ஏற்படும் என்றும் இம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு முரணாகவும், நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் தொடர்பான விதி முறைகளுக்கும் முரணாகவும் தனி சிங்கள மொழி மூலமான ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கென இவ்வருடம் மே மாதத்தில் பரீட்சை நடத்தப்பட்டு இரண்டு மூன்று தினங்களில் பெறுபேறு வெளியிடப்பட்டதுடன், பெறுபேறு வெளியிடப்பட்டு இரண்டு மூன்று தினங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பை திருத்துவதற்கான நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டுமென அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .