2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாடுகள் திருடப்படுவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2018 நவம்பர் 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவட்டாப் பகுதியில், இறைச்சிக்காக மாடுகள்  இரவு வேளைகளில் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக பிரதேச பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று  (18) இரவு கஞ்சிகுடிச்சாறு பாவட்டா பகுதியிலுள்ள பண்ணையாளர் ஒருவரின் மாட்டுப் பட்டியில் இருந்து நான்கு மாடுகளைக் களவாடி, அவ்விடத்தில் வைத்து இறைச்சிகளை எடுத்துவிட்டு, மாட்டின் தலைகளைப் போட்டு சென்றுள்ளனர்.

அத்துடன், ஒரு எருமை மாட்டின் காலை முறித்து விட்டும் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி கால்நடை உரிமையாளரான சின்னத்தம்பி இலங்கராசா, திருக்கோவில் பொலிஸில் வாய் மூலமான முறைப்பாடு ஒன்றை வழங்கிதையடுத்து, பெரும் குற்றப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இது தொடர்பாக பிரதேச பண்ணையாளர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து தமது பிரதேசத்தில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக தாம் பல முறைப்பாடுகளை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த போதும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தனர்.

எனவே, தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்து வருவதைக் கருத்தில்கொண்டு, திருடர்களை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டுமெனக் கோரினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .