2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீடித்து நிலைக்கும் தீர்வே வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்    

தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் உரிமையும், நிரந்தரமாக இருக்க வேண்டுமென்பதோடு, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வே, வடக்கு, கிழக்கு மக்களுக்கு வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அதற்காகவே கூட்டமைப்பினர், தமிழ்த் தேசியத்துடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களை விட, அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள், தமிழிலும் தமிழ்த் தேசியத்திலும், அதிக பற்றுறுதி கொண்டவர்களாக உள்ளனரென்றும் கூறிய அவர், சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ள தமிழ் மக்கள், சமூகத்தைப் பாதுகாக்கின்றவர்களாகவும் உள்ளமையைப் பாராட்டினார்.

பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் 'கொத்து ரொட்டி' எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா, நேற்று மாலை (12), திருக்கோவில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களின் பிரச்சினை என்பது, கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை ஒன்றல்ல எனவும் ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்குமான பிரச்சினையென்றும் வலியுறுத்தியதோடு, கிராமங்கள் அழிவடைவது, சமூகங்கள் சீரழிக்கப்படுவது, பாரம்பரிய முறைமைகள் இல்லாதொழிக்கப்படுவது போன்ற பல்வேறு சம்பவங்கள், வடக்கு, கிழக்கில் இடம்பெற்றன என்றும் இதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டுமெனும் எண்ணக்கருவுடன் செயற்பட்டு வருகின்றதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .