2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வளங்கள் உள்ளபோதும் கல்வியில் பின்னடைவு’

வி.சுகிர்தகுமார்   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான வளங்கள் உள்ளபோதும், வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் படி, கிழக்கு மாகாணம் மீண்டும் கல்வியில் இறுதி நிலைக்குப் பின்தள்ளப்பட்டுள்ளதாக, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பளார் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தப் பின்னடைவை நிவர்த்திக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு ஆசிரியரும், தமது தொழிலை சேவையாக நினைத்துச் செயலாற்ற வேண்டுமெனவும் ஆசிரியர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, அளிக்கம்பை தேவகிராமத்தின் புனித சவேரியர் வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட புனித சவேரியர் திருச்சொரூப சிலை திறப்பு விழாவும் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (03) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில், பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, திருச்சொரூபத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, வை.ஜெயச்சந்திரன் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .