2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வளர்ச்சியும் அபிவிருத்தியும் ‘கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளன’

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒரு சமூதாயத்தின் வளர்ச்சியும் நாட்டின் அபிவிருத்தியும் கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளனவென, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, அதிபர் எஸ்.எம்.பி.எம். அறூஸ் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கல்வியில்லாத சமூகம் எப்போதும் தாழ்ந்தவையாகவே காணப்படுமெனத் தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் எதிர்கால வழிகாட்டியாகத் திகழவிருக்கின்ற பிள்ளைகளின் கல்வியில், பெற்றோர்கள் மிகவும் கரிசீலனையுடன் செயற்பட வேண்டுமென்றும் அப்போதுதான் அச்சமூகம் எதிர்பார்த்திருக்கின்ற இலக்கை அடைய முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கம், கல்விக்குக் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, காலத்துக்கு ஏற்ற கல்வித் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளதாகவும் கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், பின்தங்கிய கிராமங்கள் தற்போது கல்வியில் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அங்கு கல்வி, பெருளாதாரம் என்பன ஒருமித்துக் காணப்பட வேண்டுமென்றும் அப்போது தான் நாட்டின் இலக்கை அடய முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .