2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை” என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கனைப்புக் குழு இணைத்தலைவரும, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சீ.கியாஸ்த்தீனை ஆதரித்து, நேற்று (25) இரவு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. றஸாக் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்  பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றிகைலேயே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதாற்கு முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். இவை முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம், தமிழ், வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தைப் பெற்றதனால் நமது மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை பரித்தெடுக்கும் நடவடிக்கைகளும், கல்முனையில் இருந்து பொத்துவில் வரை அமைந்துள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் சுமார் 12500 ஏக்கர் காணிகள் பௌத்த விகாரைகளுக்கு உள்ளதாகக் கூறி ஐக்கியமாக வாழ்ந்து வந்த தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்களிடையே சந்தேகங்கள் ஏற்படுத்துவதற்கும், அச்சங்கள் ஏற்படுத்துவதற்குமான சூழ்நிலைகள்  ஏற்படுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தினை ஆட்சி செய்தவர்கள் இப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை திட்டமிட்டு நிறைவேற்றாத நிலைப்பாடே தொடர்ந்த வண்ணம் இருந்தன.

எனவே, தற்போது உருவாகியுள்ள நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தினை தேசிய காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்து நமது பிரதேசம்  திட்டமிட்ட முறையிலே அபிவிருத்திகளை செய்வதற்கான சந்தர்பத்தினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .