2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு

யூ.எல். மப்றூக்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக, தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், நேற்று (04) செய்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளருக்கு எதிராக, மக்கள் நலன் கருதி, “பொதுத் தொல்லை” குற்றவியல் நடைமுறை கோவைச்சட்டம் 98 (1) இன் கீழ், மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைப்பாளர் சமீம் தெரிவித்தார்.

மேற்படி சட்டத்தின் பிரகாரம், 'பொதுத் தொல்லை'யின் கீழ், தனிநபர் முறைப்பாடு செய்ய முடியாது என்பதனாலும், ஆகக் குறைந்தது 05 பேர் கூட்டாக முறையிட வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலும், ஐக்கி சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் சமீமுடன் இணைந்து, மேலும் நான்கு பேர், மேற்படி வீதி முடிறுத்தப்படாமைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த வீதி நிர்மாண வேலைகள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயணம் செய்வதிலும் மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற நோய்கள் உருவாகுவதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் புழுதி சுவாசிக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .