2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியசாலை நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அஸ்லம் எஸ்.மௌலானா


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளின் நலன்கருதியே 'பாஸ்' நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஏப்ரல்-21' ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அது மேலும் இறுக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த  வைத்தியசாலை  அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் ,
வைத்தியசாலையின் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் வைத்தியர்கள்,தாதியர்கள், நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமென வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு விதிகளை வெளியார் தலையிட்டு, சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் டொக்டர்  ரஹ்மான் குறிப்பிட்டார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை (16) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர்   கூறினார்.

 டொக்டர்  ரஹ்மான்மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஞாயிற்றுக்கிழமை நோயாளிகளை பார்வையிடும் நேரத்தில், ஊடகவியலா ளர்கள் எனக்கூறிக் கொண்டு, மூவர் எமது வைத்தியசாலையினுள் அத்துமீறி பிரவேசித்து, வைத்தியசாலையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்து, எமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கட்டளைகளைப் பிறப்பித்தவாறு, பாதுகாப்பு நடவடிக்கைளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை  வைத்தியசாலை  சி.சி.டீ.வி.கமரா காணொளியில் அவதானிக்க முடிகிறது.

உண்மையில் அவர்கள் ஊடகவியலாளர்களாக இருந்தால், என்னுடன் தொடர்பு கொண்டு அல்லது என்னை சந்தித்து இங்குள்ள பாதுகாப்பு நடைமுறை குறித்து கேட்டிருக்கலாம். அவர்களை நானே நேரடியாக அழைத்துச் சென்று இங்குள்ள நடைமுறைகளை காண்பித்திருப்பேன். எமது வைத்தியசாலை தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் கிடைக்கின்றபோது, அவை தொடர்பில் பல பத்திரிகையாளர்கள் என்னை வந்து சந்தித்து, விளக்கம் கோருவதும் அவர்கள் எனது அனுமதியுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து செய்தி சேகரிப்பதும் நோயாளிகளைக் கூட சந்தித்து பேட்டி காண்பதும் வழக்கமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் நாம் அறியாத மூவர் இப்படி அத்துமீறி நுழைந்து, எமது வைத்தியசாலை நிர்வாகத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறதென
வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான்
மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .