2024 மே 08, புதன்கிழமை

இந்தியாவில் ஒரேநாளில் 24,850 பேருக்குக் கொரோனா

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,850 பேருக்கு புதிதாக பொசிட்டிவ் ஆனதால் எண்ணிக்கை 6 இலட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக அதிகரித் துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 613 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 19,628 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 20,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 இலட்சத்து 9 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 2, 44, 814 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

அதாவது, மொத்தம் 60.77% நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக மரணமடைந்த 613 பேரில் மகாராஷ்ட்ராவில் 295 பேரும், டெல்லியில் 81 பேரும் தமிழ்நாட்டில் 65 பேரும், கர்நாடகாவில் 42 பேரும், உ.பி.யில் 24 பேரும், குஜராத்தில் 21 பேரும், மேற்கு

வங்கத்தில் 19 பேரும் ஆந்திராவில் 12 பேரும் பிஹாரில் 9 பேரும் ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், ஹரியாணா, ம.பி, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா

ஆகிய மாநிலங்களில் முறையே 5 பேரும், கோவா, ஜார்கண்ட், மாநிலங்களில் முறையே 2 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவரும் பலியாகினர்.

6.7 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச

அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை நெருங்கியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு இந்தியா வரும் என தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X