2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

ஈஸ்டர் பண்டிகை; இந்தியாவில் அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டன

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

இந்தியாவில் கொவிட்-19   பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொவிட்-19  தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது.  கடந்த மார்ச் 24ஆம் திகதி  பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி  வரை

நடைமுறையில் இருக்கும்.  இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன.  அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன.  கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளி அன்று,

கொவிட்-19  எதிரொலியாக நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன.

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் பாளையம் பகுதியில் அமைந்த புனித ஜோசப் பெருநகர தேவாலயம், பெருங்கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக மூடப்பட்டது.

மராட்டியத்தின் மும்பை நகரில் மஹிம் பகுதியில் உள்ள புனித மைக்கேல் கிறிஸ்தவ தேவாலயம், டெல்லியில் கோல் தக் கானா பகுதியருகே அமைந்துள்ள தூய இருதய

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி தினத்தில் நடைபெற இருந்த வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு, தேவாலயமும் மூடப்பட்டு இருந்தது.

தேவாலயம் வாசலில், கொவிட்-19 பாதிப்பினை முன்னிட்டு அனைத்து மதச் சடங்குகளும் மற்றும் பிற வழிபாடுகளும் அடுத்த உத்தரவு எதிர்வரும் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

கொவிட் -19 நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதேபோன்று நாடு முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால்

கொண்டாடப் படுகிறது.  இதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெறும்.  இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

எனினும்,கொவிட்-19 எதிரொலியாக மும்பையில் பந்த்ரா நகரில் உள்ள கிறிஸ்தவ 

தேவாலயம் இன்று மூடப்பட்டு இருந்தது.  பெருமளவில் கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்படும் வகையில் பிரார்த்தனைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டு

உள்ளது.  கிழக்கு பந்த்ரா நகரில் உள்ள கலாநகர் பகுதி மூடப்பட்டு  ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X