2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடியுரசு தின அணிவகுப்பில் ஏ-சாட் ஏவுகணை

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடில்லி

இந்திய நாட்டின் 71-வது குடியரசு தின விழாவில் டெல்லி ராஜபாதை யில் நடந்துவரும் அணிவகுப்பில் முதல்முறையாக டி.ஆர்.டி.ஓ அமைப்பின் சார்பில் செயற்கைக் கோள் பாதுகாப்பு ஏவுகணை இடம் பெற்றிருந்தது.

அதேபோல் சின்னூக் ஹெலிகொப்டர்கள், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய

  அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் ஆகியவை குடியரசுதின நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.

71-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு

வருகிறது. டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை

ஏற்றுக்கொண்டார். அதன்பின் படைகளின் அணிவகுப்புகளை அவர் பார்வையிட்டார். இந்த முறை குடியரசு தின விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகப்

பிரேசில் அதிபர் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ வந்திருந்தார். இந்த முறை அணிவகுப்பில் இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில்

செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும், எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணை இடம் பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் டி.ஆர்.டி.ஓ அமைப்பு மிஷன் சக்தி எனும் திட்டத்தை வெளியிட்டு, முதன்முதலில் ஏ-சாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துபார்த்தது.

பூமியின் குறைந்த நீள்வட்டப் பாதையில் இருக்கும் எதிரி செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது ஏ-சாட் ஏவுகணையாகும். நொடிக்கு 11.கிமீ

வேகத்தில் செல்லும் திறன் படைத்தது ஏ-சாட். எதிரிநாட்டுச் செயற்கைக்கோளை மிகமிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .