2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ’பிளாஸ்மா வங்கி’

A.K.M. Ramzy   / 2020 ஜூலை 02 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர்.

இதனால் தலைநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதையடுத்து டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இந்த வங்கி ஐ.எல்.பி. எஸ். ஆஸ்பத்திரியில் அமைக்கப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டுள்ள எந்த நோயாளியும் இந்த வங்கியில் இருந்து பிளாஸ்மாவை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நாட்டில் முதல் முறையாக அமைக்கப் பட்ட பிளாஸ்மா வங்கியை காணொளி காட்சி மூலமாக அம்மாநில முதலமைச்சர்  கெஜ்ரிவால் இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வைத்தார்.

பிளாஸ்மா வங்கியை தொடக்கி வைத்த பின்னர் அவர் பேசியதாவது:-

பிளாஸ்மா தானம் செய்ய தகுதி வாய்ந்தவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பினால், நீங்கள் எங்களை 1031 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது

8800007722 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பலாம். டாக்டர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி, உங்கள் தகுதியை உறுதிப்படுத்துவதுடன், பிளாஸ்மா தானம் செய்வது குறித்த தகவலையும் தருவார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த வர்களில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். உடல் எடை 50 கிலோ

வுக்கு அதிகம் இருக்க வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .