2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தமிழகத்தில் ‘டெங்கு’ காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு

Administrator   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 124 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ‘டெங்கு’ காய்ச்சலை  கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

அரச வைத்தியசாலை மட்டுமின்றி தனியார் வைத்தியசாலைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 500 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அரச வைத்திசாலையில் மற்றும் தனியார் வைத்திசாலையில் 124 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

மதுரையில் 10 பேரும் சிவகங்கையில் 12 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 25 பேர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு வைத்திசாலையில்  6 குழந்தைகள் உள்பட 30 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், பல்வேறு வகை காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை திருத்தணியில் 11 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேர் மர்ம காய்ச்சலுக்கு இறந்துள்ளதால் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .