2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தொடரும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். இரு மொழிக் கொள்கையே தொடரும்” என தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டுகள் காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக பல காலகட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில், இரு மொழி கொள்கையை கடைபிடிப்போம் என 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிப்போம் என சட்டசபையில் நடந்த விவாதத்தின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருந்தாலும், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்தில் ஒட்டு மொத்த உணர்வும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையினை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்தி கொள்ள வேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .