2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தமிழகம் உட்பட 5 மாநிலத் தேர்தல்: படை வீரர்களை அனுப்பத் திட்டம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப் பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல்களை சுமூகமாக நடத்தி முடிக்க தேவையான படைகளை அனுப்புவது குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேசியுள்ளனர்.

இதன்படி, இந்த 5 மாநிலங்களுக்கும் 250க்கும் மேற்பட்ட கம்பெனி படைகளை அனுப்ப உள்துறை முடிவு செய்துள்ளது. இதில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ-திபத்தியன் எல்லை பொலிஸார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், சாஸ்த்ரா ஷீமா பால் பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .