2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேவையான அத்தியாவசிய பொருள்கள் கையிருப்பில்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, 

உலகை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 இந்தியாவையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் 120இக்கும் மேற்பட்டோர் இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடிபட்வா தினத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடி காலத்தில் அரசு தங்களுக்கு பின்னால் உறுதியாக நிற்கிறது என்பதை ஏழை மற்றும் தினக்கூலிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மராட்டியத்தில் அத்தியாவசிய பொருள்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும்.  கொவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கவும், முகக் கவசங்களை தயாரிக்கவும் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களை குறைக்கவோ அல்லது அவர்களின் சேவைகளை நிறுத்தவோ கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சந்தைகளுக்கு கூட்டமாக திரண்டு வர வேண்டாம். தங்கள் வீட்டின் அருகில் குறைந்த தூரத்தில் உள்ள சந்தைக்கு தனியாக சென்று பொருள்களை வாங்கிவரவும்.

மேலும் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். இந்த போரில் வெற்றி பெற்று குடி பட்வாவை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடுவோம்.

இந்த போரில் எதிரி நம்மை எப்படி தாக்குவான் என்பது நமக்கு தெரியாது. வைரஸ்தான் இங்கு நம்முடைய எதிரியாகும். நீங்கள் வெளியேறினால் எதிரிகள் உங்களை தாக்கி உங்கள் மூலம் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளது. 

நீங்கள் நிலைமையின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்.

வீட்டில் குளிரூட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதை பயன்படுத்துவதால் வீட்டுக்கு குளிர்ச்சி, ஈரப்பதம் நிலவும்.

இந்த வைரஸ் நீண்டநேரம் வாழ வழிசெய்யும். இதற்கு பதில் இயற்கையான காற்றோட்டத்தை பயன்படுத்துங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .