2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய வடிவில் கொரோனா மருந்து: அவசர பயன்பாட்டுக்கு அரசு ஒப்புதல்

Editorial   / 2021 மே 09 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில்  கொரோனாத் தொற்றின் 2ஆம்  அலையானது  தீவிரமடைந்துவருகின்றது. குறிப்பாக நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந் நிலையில்  மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பானது தண்ணீரில் கலந்து பருகும் வகையில் கொரோனாத் தொற்றுக்கான புதிய மருந்தைத் கண்டுபிடித்துள்ளது.

டிஒக்ஸி டி- குளுகோஸ் (Deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ள இம் மருந்தானது பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கொரோனா தொற்றாளர்கள்  110 பேருக்கு இம் மருந்து வழங்கப்பட்டபோது அவர்கள் வேகமாகக் குணமடைவது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து மூன்றாம்  கட்ட பரிசோதனைகள் தற்போது இந்தியா முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடைபெற்று வருகின்றன.

மேலும் தற்போது இம் மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .