2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விவசாயிகள் கோபம்! மறுபரிசீலனை செய்யவும்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 29 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

வேளாண் சட்டங்கள் காரணமாக விவசாயிகள் கோபமடைந்துள்ளதாகவும், இச்சட்டங்களை மறுபரிசீலனை செய்வதே சிறந்தது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாள்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளிடம் இன்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் ''டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்ற பிறகு, டிசம்பர் 3ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அங்கே செல்ல வேண்டும்'' என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

அமித் ஷா இவ்வாறு கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதுதான் சிறந்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .