2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வேலூர் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் சிறைச்சாலையில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறைசாலையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் அலைபேசி சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் இரத்து செய்தது.

சிறையிலுள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 11ஆவது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 19ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை மிகவும் சோர்வாகக் காணப்பட்டது. வைத்தியர்கள் குழுவினர் இரண்டு பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வந்தனர்.

இரண்டு பேரும் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. முருகன்-நளினிக்கு இரத்த அழுத்தம், சீனியின் அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறைச்சலையில் இன்று 11ஆவது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நளினி கைவிட்டார். நளினியுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை காரணமாக தனது உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .