2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்?

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 2024ஆம் ஆண்டு போட்டியிடுவது குறித்து திட்டமிடுவதை ஆரம்பிப்பது குறித்து தயாராகியுள்ளது போல அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனங்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலின் முடிவை மாற்றுவதற்கான தனது சட்ட முயற்சிகள் தோற்கலாம் என்பதை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் ஏற்றுக் கொள்வது போலக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், அச்சமயத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டு போட்டியிடலாம் என்பது போல வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தாங்கள் செய்ய முயல்வதாகவும், இல்லாவிடில் நான்கு ஆண்டுகளில் சந்திப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததாக குறித்த நிகழ்விலிருந்த குடியரசுக் கட்சி தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அடுத்த மாத 20ஆம் திகதி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் விடுவது குறித்தும் அதற்குப் பதிலாக அந்நாளில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து அறிவிப்பது குறித்து ஆலோசகர்களுடன் ஜனாதிபதி ட்ரம்ப் ஆலோசிப்பதாக இது தொடர்பாக அறிந்த தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .