2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

45 ஆண்டுகளில் மோசமான நிலையில் இந்தியாவின் வேலையற்றோர் சதவீதம்

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் வேலையற்றோர் சதவீதம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதென, அரசாங்கக் கருத்துக்கணிப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையிலான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, வேலையற்றோர் சதவீதம், 6.1 சதவீதமாகக் காணப்பட்டது. இது, 1972-1973 காலப்பகுதிக்குப் பின்னர் காணப்படும் உயர்வான நிலையாகும்.

இந்தத் தரவுகளை வெளியிடுவது, அரசியல் பிரச்சினையாக அமைந்திருந்தது. இவ்வலுவகத்தின் பதில் தவிசாளராகவும் அவ்வலுவகப் பணிப்பாளர் சபையின் இன்னோர் உறுப்பினரும், நேற்று முன்தினம் (30) பதவி விலகியிருந்தனர். குறித்த தரவுகளை வெளியிடுவதில் தாமதம் நிலவுகிறது எனத் தெரிவித்தே, அவர்கள் பதவி விலகியிருந்தனர்.

இத்தரவுகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாட்டின் 500, 1,000 ரூபாய்ப் பணத்தாள்களைச் செல்லுபடியாக்குவதற்குப் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முதலாவது வேலையற்றோர் கணிப்பாக இது அமைந்துள்ளது.

எனவே, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் அதிகமான அழுத்தங்களை வழங்கும் ஒரு விடயமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .