2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு கொங்கோ சிறைச்சாலையில் பட்டினியால் 52 சிறைக்கைதிகள் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொங்கோ ஜனநாயகக் குடியரசு அரசாங்கத்தின் போதுமான நிதியளிப்பு இல்லாமை காரணமாக வடகிழக்கு கொங்கோ நகரான புனியாவிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 52 சிறைக்கைதிகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளும், உள்ளூர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் படி உலகின் மிகவும் சனநெருக்கடியான சிறைச்சாலைகளுள் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் சிறைச்சலைகளும் உள்ளடங்குகின்ற நிலையில், மோசமான நிலைமைகளில் அற்ப பங்கீடுகளிலேயே சிறைக்கைதிகள் அங்கிகரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகளின் தரவின்படி புனியா சிறைச்சாலையானது ஏறத்தாழ 500 சதவீத கொள்ளளவில் இயங்குகின்றது.

இந்நிலையில், சிறைச்சாலையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு அரசாங்கத்தின் ஆங்காங்கேயான ஆதரனை புனியா மேயர் பேர்டினான்ட் பிம்போ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, கொங்கோ ஜனநாயக் குடியரசிலுள்ள சிறைச்சாலைகளில் உணவு அல்லது மருந்து தீர்ந்து போகாததை தான் தனிப்பட்ட ரீதியில் உறுதிப்படுத்துவேன் என கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சரவைக்கு அதன் ஜனாதிபதி பீலிக்ஸ் திஷிசெக்டெய் இம்மாதம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், சிறைச்சாலையின் மூன்று மாதங்களின் செலவீனங்களை மாத்திரமே பொறுப்பேற்க முடியும் என கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் அரசாங்கம் உறுதியளித்ததாக கொங்கோவிலுள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் அறிக்கையொன்றில் புனியா சிறைச்சாலையின் தலைவர் கமில்லே ஸொன்ஸி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் உண்மையான கொள்ளளவில்லாமல் வழமையான கொள்ளளவுக்கேற்றவாறு உணவுத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்ற நிலையில் கொங்கோ சிறைச்சாலைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு வழமையானது ஏன மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .