2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

800 அகதிகள் மத்தியதரைக் கடலில் மீட்பு

Shanmugan Murugavel   / 2021 மே 02 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆட்கடத்தல்காரர்களின் படகுகளிலிருந்து மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 236 பேருடன் இத்தாலியின் சிசிலியன் துறைமுகத்தை நோக்கி ஓஷன் வைக்கிங் சென்று கொண்டிருக்கின்ற நிலையில், லம்பெடுஸா தீவுக்கு 532 பேரை இத்தாலியக் கரையோரக் காவற்படையும், எல்லைப் பொலிஸாரும் கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டு இறப்பர் டிங்கிகளிலிருந்து நான்கு நாள்களுக்கு முன்னர் அகதிகளை தாம் இயக்கும் ஓஷன் வைக்கிங் மீட்டதாக, கடல் மீட்புக் குழுவான எஸ்.ஓ.எஸ் மெடிடெரனி நேற்று தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் தனித்துள்ள 119 சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய அலைகளுக்கு மத்தியில் கடலில் பயணிக்க முடியாத டிங்கிகளில் பயணிக்குமாறு லிபியாவைத் தளமாகக் கொண்ட ஆட்கடத்தல்காரர்களால் அடிக்கப்பட்டதாக சிலர் தெரிவித்ததாக மெடிடெரனி கூறியுள்ளது.

இதேவேளை, இத்தாலிய கடற்படைக் கப்பலொன்றானது 49 அகதிகளை மீட்டுள்ளதாக இத்தாலிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நான்கு வெவ்வேறான நடவடிக்கைகளில் ஆட்கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட படகுகளிலிருந்து மீட்கப்பட்ட 308 பேருடன் சீ-வோச் 4 கப்பல், மத்திய தரைக் கடலில் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .