2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மொத்தமாக 74,576 பேர் கொரோனாவைரஸால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், COVID-19-ஆல் குறைந்தது 114 புதிய உயிரிழப்புகள் நேற்றைய முடிவில் பதிவுசெய்யப்பட்ட நிலையில் COVID-19-ஆல் சீனாவில் மொத்தமாக குறைந்தது 2,118 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, COVID-19-ஆல் தென்கொரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 104 பேர் COVID-19-ஆல் தென்கொரியாவில் பீடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 53 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டிருந்ததாக தென்கொரியா அறிவித்திருந்தது. COVID-19 தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் மத்திய நகரமான டயெகுவிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்றதாலேயே பல தொற்றல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், டயமன்ட் பிறின்ஸஸ் பயணிகள் கப்பலில் பயணித்த COVID-19-ஆல் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயதான பயணிகள் இருவர் இறந்ததாக ஜப்பானின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இக்கப்பலில் COVID-19 பீடிக்கப்பட்டதென 621 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, மத்திய ஈரானிய நகரமான குவாமில் COVID-19ஐக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஈரானியர்கள் இருவர் வைத்தியசாலையில் நேற்று  இறந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .