2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெள்ளை மாளிகைக்கு பயங்கரமான நஞ்சு?

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளை மாளிகைக்கு முகவரியிடப்பட்டிருந்த கடித உறையொன்று பயங்கரமான நஞ்சொன்றான றின்சின் என அடையாளப்படுத்தப்பட்ட பதார்த்தத்தைக் கொண்டிருந்ததாக சட்ட அமுலாக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐக்கிய அமெரிக்க செய்தி நிறுவனங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த வார ஆரம்பத்தில் பொதியானது இடைமறிக்கப்பட்டதாக இரண்டு பெயரிடப்படாத சட்ட அமுலாக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் அறிக்கையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரமான பதார்த்தத்தை அடையாளங்காணுவதற்காக இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அண்மைய நாள்களில் குறித்த கடிதங்கள் வெள்ளை மாளிகைக்கும், டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ல மத்திய முகவரகங்களுக்கும் அனுப்பப்பட்டதாக குறித்த விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்ட பெயரிடப்படாததொரு சட்ட அமுலாக்க அதிகாரியை மேற்கோள் காட்டி நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கனடாவிலிருந்து பொதி அனுப்பப்பட்டதாக விசாரணையாளர்கள் நம்புவதுடன், பெண்ணொருவரை சந்தேகநபராக அடையாளங்கண்டுள்ளதாகவும் நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தற்போதும் விசாரணை செய்யப்படுவதாகவும், மேலும் கடிதவுறைகள் இவ்வாறானதாக அனுப்பப்பட்டதா என விசாரணையாளர்கள் பார்ப்பதாகவும் நியோ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .