2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஃப்ரினுக்குள் சிரியப் படைகள்

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடமேற்குப் பிராந்தியமான அஃப்ரின் பகுதிக்குள், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள், நேற்று முன்தினம் (21) புகுந்தன. குர்திஷ்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவரும் துருக்கிப் படைகளை எதிர்ப்பதற்காகவே, சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள், இவ்வாறு அப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

தமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள குர்திஷ் கட்சியின் ஒரு பிரிவாகவே, சிரிய குர்திஷ்களையும் துருக்கி கருதும் நிலையில், சிரியாவுக்குள் புகுந்து, தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குர்திஷ்களுக்கும் சிரிய அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, குர்திஷ் ஆயுததாரிகளுக்கு ஆதரவாகச் செயற்பட, சிரியா முன்வந்துள்ளது.

அஃப்ரினுக்குள் அப்படைகள் புகுந்ததும், அப்படைகள் மீதும், துருக்கியால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அஃப்ரினுக்குள் புகுந்த படைகள், சிரியக் கொடிகளை ஏந்தியவாறும் தமது ஆயுதங்களை வெளிக்காட்டியவாறும், பேரணியாகச் சென்றன. அப்படைகள் சென்ற பின்னர், அப்படைகள் மீது, துருக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

“பயங்கரவாதிகள்” மீதே, தாம் தாக்குதல் நடத்தியதாக துருக்கி தெரிவித்தாலும், தம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என, சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான ஆயுததாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, கிழக்கு கூட்டாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக, பதற்றமான, நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அஃப்ரினுக்குள் ஏற்பட்டுள்ள இம்மாற்றம், மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .