2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஸ்ரனெக்காவைப் பயன்படுத்துவதை இடைநிறுத்திய நெதர்லாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 15 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸ்ரனெக்கா கொவிட்-19 தடுப்புமருந்திலிருந்தான எதிர்பாராதவிதமான பக்க விளைவுகள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, அதைப் பயன்படுத்துவதை நெதர்லாந்து நேற்று இடைநிறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கையாக, குறைந்தது இம்மாதம் 29ஆம் திகதி வரைக்கும் தடுப்புமருந்து பயன்படுத்தப்படாதென, அறிக்கையொன்றில் நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டென்மார்க், நோர்வேயிலிருந்தான மோசமான பக்க விளைவுகள் குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அயர்லாந்தும் இவ்வாறான முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் தடுப்புமருந்தைப் பெற்ற மூன்று சுகாதாரப் பணியாளர்கள், இரத்தப்போக்கு, இரத்தக்கட்டி, குறைந்த எண்ணிக்கையான குறுதிச் சிறுதட்டுகளுக்காக, வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுவதாக, கடந்த சனிக்கிழமை நோர்வே சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரத்தக் கட்டிகள் ஏற்படுதுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாக எவ்வித ஆதாரமும், தடுப்புமருந்தைப் பெற்றோரிடமிருந்தான தரவு மீளாய்வில் இல்லை என அஸ்ரனெக்கா தெரிவித்துள்ளது.

டென்மார்க், நோர்வே, அயர்லாந்து, ஐஸ்லாந்து, தாய்லாந்து என்பன தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

தடுப்புமருந்தைப் பெற்ற ஒருவர் உயிரிழந்ததையடுத்து, ஒரு தொகுதி தடுப்புமருந்துகளைப் பாவிப்பதை நிறுத்தப் போவதாக இத்தாலியின் வட பிராந்தியமான பைட்மொன்ட் தெரிவித்துள்ளதுஅன், குறித்த தொகுதியை பயன்படுத்துவதை ஒஸ்திரியாவும் கடந்த வாரம் நிறுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .