2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இத்தாலியில் சுயாட்சிக் கோரிக்கைகள்

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் வடக்குப் பகுதியில் காணப்படும், செல்வம்மிகுந்த இரண்டு பிராந்தியங்கள், அதிகமான சுயாட்சி தேவையென, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஐரோப்போவில் குழப்பங்கள் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, ஸ்பெய்னிலிருந்து பிரிவதற்கு கட்டலோனியா மேற்கொண்டுவரும் முயற்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதித்துள்ளன. இவ்விடயத்தில் நேரடியான கருத்துகளை, வெளிப்படையாக முன்வைக்காத போதிலும், ஸ்பெய்ன் மத்திய அரசாங்கத்துக்கே, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு காணப்படுகிறது என்று கருதப்படுகிறது.

இந்நிலையிலேயே, லொம்பார்டி, வெனேட்டோ ஆகிய இத்தாலியப் பிராந்தியங்கள், தமக்கான அதிகபட்ச சுயாட்சி கோரி வாக்களித்துள்ளன. சுமார் 90 சதவீதமான மக்கள், இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இத்தாலிய மத்திய அரசாங்கத்துடன், நிதியியல் ஏற்பாடுகள் தொடர்பில் பேரம்பேசல்கள் மேற்கொள்ளப்பட, இப்பிராந்தியங்கள் எதிர்பார்க்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .