2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இருமியபடி செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தான்ஸானியாவின் நிதியமைச்சர் பிலிப் எம்பாங்கோ செய்தியாளர் மாநாடொன்றில் நேற்று முன்தினம் இருமியபடி இருந்துள்ளார்.

கொவிட்-19-ஆல் எம்பாங்கோ இறந்து விட்டதான வதந்திகளையடுத்து, தான்ஸானியாவின் தலைநகர் டொடோமவிலுள்ள வைத்தியசாலையொன்றில் 10 செய்தியாளர்களுடன் உரையாற்றிய அவர், தான் என்னத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தியிருக்கவில்லை.

முகக்கவசத்தை அணிந்திருக்காத எம்பாங்கோவைச் சூழ வைத்தியரொருவரும், வைத்தியசாலைப் பணிப்பாளரொருவரும் காணப்பட்டதுடன் அவர்களும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. எம்பாங்கோவுக்கு பின்னால் நின்றிருந்த வைத்தியர்களும், தாதியர்களும் முகக்கவசத்தை அணிந்திருந்தனர்.

தளதளத்த குரலில் காணப்பட்ட எம்பாங்கோ, 14 நாள்களைத் தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .