2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலண்டன் தாக்குதல்: 2ஆவது சந்தேகநபரும் கைதானார்

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனின் நிலக்கீழ் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இரண்டாவது சந்தேகநபரையும் கைதுசெய்ததாகத் தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை மேலும் முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதிக பயணிகள் காணப்பட்ட ரயிலில், இந்தக் குண்டு வெடித்திருந்தது. இது, முழுமையாக வெடிக்கவில்லை என்று கருதப்படுகின்ற போதிலும், அதில் 30 பேர் காயமடைந்திருந்தனர்.

கடந்த 6 மாதங்களில், இலண்டனில் மேற்கொள்ளப்பட்ட 5ஆவது தாக்குதல் என்பதோடு, இவற்றின் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம், பாரதூரமானது என்ற நிலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், 2ஆவது சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம், குறைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் ஆபத்தான நிலையிலேயே நகரம் காணப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

இதில், முதலாவதாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், எவ்வாறு இவ்வாறான நடவடிக்கைகளுக்குள் ஈர்க்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகளும், முக்கியமானவையாகக் காணப்படுகின்றன என, பொலிஸார் குறிப்பிடுகின்றனர். முதலாவது சந்தேகநபர், சிரிய அகதி என, ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

பிரித்தானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட சி.சி.டி.வி காட்சியில், வீடொன்றிலிருந்து ஒருவர், ரயிலில் வெடித்த கருவி போன்ற ஒரு கருவியுடன் வெளியேறுவது போன்று காண்பிக்கப்பட்டது. அது தொடர்பாகவும் விசாரணை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .