2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. 

அதைத் தொடர்ந்து ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் நவம்பவர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன், தென்னாபிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

இதையடுத்து, 'அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்' என, அமெரிக்க ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ''ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்தும். 

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்,'' எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .