2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எதிரணி மீதான தாக்குதல்களில் 53 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடக்குப் பகுதியில், எதிரணிப் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் விளைவாக, குறைந்தது 28 சிறுவர்கள் உள்ளடங்கலாக 53 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில், 41 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என, கண்காணிப்பகம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வெண்ணிக்கையில் அதிகரிப்பை வெளியிட்டு, 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

எதிரணியால் கட்டுப்படுத்தப்படும் முக்கியமான மாகாணமான இட்லிப்பிலுள்ள பகுதிகள் மீதும், அதற்கு அருகிலுள்ள அலெப்போ மாகாணத்திலுள்ள சில பகுதிகள் மீதும், இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என, கண்காணிப்பகம் தெரிவித்தது.

ஏற்கெனவே காயமடைந்திருந்தோர் உயிரிழந்ததன் காரணமாகவும், தாக்குதல்களில் உயிரிழந்தோரின் சடலங்கள், இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்டதன் காரணமாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டது.

அலெப்போவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை, சிரிய அரசாங்கமா அல்லது ரஷ்யப் படையினரா நடத்தினர் என்பது தொடர்பில், தெளிவில்லாமல் உள்ளது என, கண்காணிப்பகம் குறிப்பிட்டது. ஆனால், இட்லிப்பில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, ரஷ்யாவே மேற்கொண்டது என, கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .