2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எல்லை ஒப்பந்தம் தொடர்பில் ட்ரம்ப் மகிழ்ச்சியில்லை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க - மெக்ஸிக்க எல்லையுடன் சுவரொன்றைக் கட்டுவதற்குத் தான் கோரிய அனைத்துப் பணத்தையும் தான் பெறாவிட்டாலும், அரசாங்கத்தை முடக்குவதற்கான தனது நடவடிக்கைக்கு மீளச் செல்வேன் என்றவாறான கருத்துகளை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று  வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வேலிக்காக தனக்கு வரும் குறிப்பிடத்தக்களவு குறைவான பணத்தை அளிக்கும் காங்கிரஸில் இணக்கத்துக்கு வந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஏற்றுக் கொள்வார் போலத் தோன்றுகிறது.

“நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என என்னால் கூற முடியாது, நான் சிலிர்ப்படைந்துள்ளேன் என என்னால் கூற முடியாது” எனத் தெரிவித்த ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “இன்னொரு முடக்கமொன்றை நீங்கள் பார்ப்பீர்கள் என நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சியினதும் ஜனநாயகக் கட்சியினதும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே வந்த இணக்கத்துக்கு வந்த, சுவரைக் கட்டுவதற்கும் ஏனைய எல்லைப் பாதுகாப்பு விடயங்களுக்கும் ஏறத்தாழ 1.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கும் ஒப்பந்தம் தொடர்பாகவே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

ட்ரம்ப் கோரிய 5.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை விட குறித்த தொகை குறைவென்றபோதும் குறித்த ஒப்பந்தமானது குடியரசுக் கட்சியினரையும் ஜனநாயக் கட்சியினரையும் திருப்திப்படுத்தியதுடன், இன்றிலிருந்து அரசாங்கத்தின் பெரும்பாலானவற்றை முடக்கும் ட்ரம்பின் ஆபத்திலிருந்து பின்வாங்கவும் செய்திருந்தது.

காங்கிரஸால் வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமான நிதியைச் சேர்த்துக் கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தபோதும், அது எவ்வாறெனக் கூறியிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .