2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எழுவரின் விடுதலை பற்றி கேள்வியெழுப்புகிறார் அற்புதம்மாள்

Editorial   / 2019 ஜூன் 13 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலை தொடர்பில், ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மாநில அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில்,

பிறமாநிலங்களில், பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, சிறை விதிகளின்படி விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்குக் காணப்படுமாக, இருந்தால் தமிழகத்தில் ஏன் அவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற முடியாது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், பேரறிவாளனின் விடுதலைக்குறித்து, தான் மத்திய அரசாங்கத்தை நாடவேண்டும் என, எதிர்பார்க்கின்றனர் என்றும் ஆனால், மாநில அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, தான் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது, சட்டத்தை எதிர்க்கும் செயல் என்றே கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது, மாநில அரசாங்கம்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்றி எழுவரின் விடுதலைக்கு வழியமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .