2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் உள்ள தளத்துக்கருகே றொக்கெட்டுகள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சில ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தக்காரர்களைக் கொண்டுள்ள ஈராக்கிய இராணுவத் தளமொறுக்கருகிலான கிராமப் புற பகுதியொன்றில் இரண்டு றொக்கெட்டுகள் நேற்று முன்தினம் வீழ்ந்ததாகவும், ஆனால் உயிரிழப்பேதுமில்லையென ஈராக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தளத்துக்கின் வெளி வேலியிலேயே றொக்கெட்டுகள் தரையிறங்கியதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கியத் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காகவுள்ள பலாட் விமானத் தளத்தை தாக்க இலக்கு வைத்ததாகவே இத்தாக்குதல் இருந்ததாகத் ஆரம்பகட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியதாகவும், ஆனாலும் றொக்கெட்டுகள் முன்னரே அல்-பு அசி கிராமத்தில் தென் கிழக்காக வீழ்ந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு உடனடியாக எக்குழுவும் உரிமை கோரவில்லை என்றபோதும், இவ்வாறான சம்பவங்களுக்கு முன்னர் ஈரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்கள் உரிமை கோருவதாக சில ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .