2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இணைவதை நோக்கி பைடன் நிர்வாகம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையுடன், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது தொடர்புகளை மேற்கொள்ளவுள்ளது.

இஸ்ரேலுக்கெதிரான பாகுபாடு, மறுசீரமைப்பில்லைக் காரணங்காட்டி ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமானது மனித உரிமைகள் சபையிலிருந்து வெளியேறிய மூன்று ஆண்டுகளின் பின்னரே ஜனாதிபதி பைடனின் நிர்வாகமானது தொடர்புகளை மேற்கொள்ளவுள்ளது.

அவதானிப்பாளரொருவராக மனித உரிமைகள் சபைக்கு ஐ. அமெரிக்கா திரும்பும் என்பதை அந்நாட்டின் இராஜாங்கச் செயலாளர் இன்று அறிவிக்கவுள்ளார் என இராஜங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .