2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நாவுக்கு எதிராக ‘பிணப் போராட்டம்’

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஆபிரிக்கக் குடியரசிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்னால், நேற்று முன்தினம் (11) மேற்கொள்ளப்பட்ட விநோதமான போராட்டம், அதிக கவனத்தை ஆர்த்துள்ளது.

பாங்குயில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், 17 சடலங்களை அங்கு வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் எனவும், ஐ.நாவுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதலில் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், அதை மறுத்த ஐ.நா பேச்சாளர் விளாடிமிர் மொன்டெய்ரோ, கொல்லப்பட்ட அவர்கள், ஆயுதமேந்திய குற்றவாளிகள் எனவும், ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் மீது, திருப்பித் தாக்கப்பட்டதிலேயே அவர்கள் கொல்லப்பட்டனர் என்று, “பிணங்களைப் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்கின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .