2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒப்பந்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடைவார்களாவென ட்ரம்ப் சந்தேகம்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைப் பாதுகாப்பில் தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தமொன்றுக்கு இணங்கி இன்னொரு அரசாங்க முடக்கத்தைத் ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பார்களா என்ற சந்தேகத்தை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

மெக்ஸிக்கோவுடனான ஐக்கிய அமெரிக்க எல்லையில் சுவரொன்றை அமைப்பதில் மீண்டும் ட்ரம்ப் உறுதிபூண்டுள்ள நிலையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வோல் ஸ்ரீட் ஜேணல் பத்திரிகையுடனான நேர்காணலொன்றிலேயே, நிதியளிப்பு நிறைவடையும் மூன்று வார காலத்தில் இன்னொரு ஒப்பந்தமொன்றை காங்கிரஸ் உருவாக்கி இன்னொரு அரசாங்க முடக்கத்தை தடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்னொரு அரசாங்க முடக்கம், நிச்சயமாக ஒரு தெரிவாக இருப்பதாக மேலும் தெரிவித்த ட்ரம்ப், எல்லைச் சுவரை நிர்மாணிக்கும் பொருட்டு தேசிய அவசரகாலநிலையையொன்றை தான் பிரகடனப்படுத்தலாமெனக் கூறியுள்ளார். இதை ஜனநாயக் கட்சியினர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவார்கள் என்று கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .