2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குப்பையை பிடித்து தப்பிய நபர்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரக்கு கப்பலிலிருந்து வீழ்ந்த அதன் பிரதம பொறியியலாளரொருவர் கடல் குப்பையொன்றின் பகுதியைப் பிடித்தவாறு தப்பியுள்ளதாக அவரது மகன் வெளிப்படுத்தியுள்ளார்.

பசுபிக் சமுத்திரத்தில் அதிகாலையில் வீழ்ந்த பின்னர் 14 மணித்தியாலங்களை நீரில் குறித்த நபர் களித்துள்ளார்.

உயிர் காப்பு அங்கியொன்றை அணிந்திருக்காத குறித்த நபர், தனது உயிரைப் பாதுகாப்பதற்காக சில கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள கறுப்புப் புள்ளியொன்றை நோக்கி 52 வயதான குறித்த நபர் நீந்தியுள்ளார்.

குறித்த கறுப்புப் புள்ளியானது மீன்பிடி போசாக்கட்டையொன்றாக இருந்ததுடன், தான் மீட்கப்படும் வரையில் அவர் அதைப் பிடித்துக் கொண்டு இர்ருந்துள்ளார்.

நியூசிலாந்தின் தெளரங்கா துறைமுகத்துக்கும் பிரித்தானியப் பிராந்தியமான பிற்கைர்னுக்கு இடையே விநியோகத்தில் ஈடுபடும் கப்பலில் இருந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கப்பலில் நடக்கும்போதே குறித்த நபர் வீழ்ந்திருந்த நிலையில், ஆறு மணித்தியாலங்களின் பின்னரே அவர் வீழ்ந்ததை அறிந்த கப்பலின் மாலுமிகள் குழாம், அதன்பின்னர் கப்பலைத் திருப்பியுள்ளது. பின்னரே அவர் அடையாளங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .