2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் 2ஆவது பதவிக்காலத்தை வென்றார் ட்ரூடோ

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் பிரதமராக தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெல்வதை நோக்கி கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நகர்கிறார்.

தொடரான பிரச்சினைகளையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதும், அவரது நான்காண்டு அரசாங்கத்தின் மீதான பொதுஜன வாக்கெடுப்பொன்றாக குறித்த நாடாளுமன்றத் தேர்தல் நோக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபிரல் கட்சியின் சிறுபான்மை அரசாங்கமொன்றை கனேடியத் தொலைக்காட்சிகளான சி.டி.வியும், சி.பி.சியும் பிரகடனப்படுத்தி இருந்தன.

அந்தவகையில், ஆட்செ செய்வதற்கு மற்றைய கட்சிகளுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி இன்று காலை ஒன்பது மணி வரை 158 ஆசனங்களை லிபரல் கட்சி வென்றிருந்தது. 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் 184 ஆசனங்களை லிபரல் கட்சி வென்றிருந்தமை குறிப்பித்தக்கது.

கனேடிய நாடாளுமன்றமானது 338 ஆசனங்களைக் கொண்டிருக்கையில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 170 ஆசனங்களைப் பெற வேண்டும்.

அந்தவகையில், எக்கட்சியுடன் இணைந்து லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெளிவில்லாமல் உள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பேரம்பேசல்கள் இடம்பெறலாம்.

எதிர்வுகூறல்களின்படி, அரசாங்கமொன்றை அமைப்பதற்காக லிபரல் கட்சியுடன் கியூபெக் கட்சி அல்லது புதிய ஜனநாயக் கட்சி இணையலாம்.

எதிர்பார்ப்புகளின்படி அன்றூ ஷீரால் தலைமை தாங்கப்படும் பழமைவாதக் கட்சி 122 ஆசனங்களைப் பெறும் என்ற நிலையில், அக்கட்சி உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாகவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கட்சி 99 ஆசனங்களைப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .