2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கப்பல் மூழ்கியதையடுத்து 45 அகதிகளை மீட்ட இத்தாலிய அதிகாரிகள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியத் தீவான லம்பெடுசாக்குத் தெற்காக 15 மைல்கள் தொலைவில் அகதிகளின் கப்பல் மூழ்கியதையடுத்து, தாம் 45 அகதிகளை மீட்டதாக இத்தாலியக் கரையோரக் காவற்படை நேற்று தெரிவித்துள்ளது.

தற்போதைய தருணத்தில் அனைத்து ஆண்களான 45 அகதிகள் மீட்கப்பட்டதாகவும், லம்பெடுசாவை நேற்றுக் காலையில் சென்றடைந்ததாகவும் அறிக்கையொன்றில் இத்தாலியக் கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட அதிதிகள் எந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்புகள் எவையையும் இத்தாலியக் கரையோரக் காவற்படை வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில், இத்தாலிய தீர்வைப் பொலிஸாருடன் இணைந்து எந்தவொரு காணாமல்போனோரையும் தொடர்ந்து தேடுவதாக இத்தாலியக் கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலையில் உயிர்காப்பு அங்கிகள் எறியப்பட்ட நிலையில், இருட்டில் அகதிகள் உதவி கோருவது கரையோரக் கவாற்படை காணொளியில் பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .