2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரைக்கும் நாயோடு ட்ரம்ப்பை ஒப்பிடுகிறது வடகொரியா

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய கோபமான உரையை, நாய் குரைக்கும் சத்தத்தோடு, வடகொரிய வெளிநாட்டு அமைச்சர் றி யொங் ஹோ ஒப்பிட்டுள்ளார்.

ஐ.நாவில் தனது முதலாவது உரையை நிகழ்ச்சிய ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியாவின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், அந்நாட்டை முற்றாக அழித்துவிடப் போவதாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தனது விமர்சனத்தை வெளிப்படுத்திய அமைச்சர் றி யொங், “‘நாய்கள் குரைக்கும் போதும், பவனி தொடர்ந்து செல்லும்’ என்றொரு சொற்றொடர் உள்ளது. நாய் குரைக்கும் சத்தத்துடன் எங்களை வியப்புக்குள்ளாக அவர் நினைத்திருந்தால், அவர் நிச்சயமாகக் கனவு காண்கிறார்” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரையின் போது, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை அவர், “றொக்கெட் மனிதன்” என்று கேலியாகக் குறிப்பிட்டிருந்தார். அதுகுறித்து அமைச்சர் றி யொங்கிடம் கேட்டபோது, “அவரின் (ட்ரம்ப்பின்) உதவியாளர்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

றி யொங், தனது உரையை, இன்று (22) நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .