2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொவிட்-19 உயிரிழப்புகளை மறைத்ததா ஈரான்?

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானில் அரசாங்கம் தெரிவித்ததை விட கொவிட்-19 உயிரிழப்புகள் ஏறத்தாழ மூன்று மடங்காக இருப்பதாக பிரித்தானிய ஓளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பேர்சியன் சேவை விசாரணையொன்று கண்டுபிடித்துள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி வரை ஏறத்தாழ 42,000 பேர் கொவிட்-19 குணங்குறிகளால் இறந்ததாக ஈரானிய அரசாங்கத்தின் தரவுகள் வெளிக்காட்டுகையில் 14,405 பேரே கொவிட்-19 குணங்குறிகளால் இறந்ததாக ஈரானிய சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ இருமடங்கானதாக, 278,827 இல்லாமல் 451,024ஆகக் காணப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 மில்லியனைத் தாண்டியுள்ள நிலையில், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 700,000ஐ அண்மித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 மணி வரையில் 4,685,289ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 155,349ஆகக் காணப்படுகிறது.

இதேவேளை, பிரேஸிலானது கடந்த 24 மணித்தியாலங்களில் 25,800 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும், 541 கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளையும் பதிவுசெய்ததாக அந்நாட்டு சுகாதாரமைச்சு நேற்று தெரிவித்துள்ள நிலையில், அங்கு 2.73 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 94,104ஆகக் காணப்படுகிறது.

ரஷ்யாவானது 5,394 புதிய கொவிட்-19 தொற்றுக்களை இன்று பதிவு செய்த நிலையில் அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 856,264ஆகக் காணப்படுவதுடன், அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19-ஆல் 79 பேர் இறந்த நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 14,207ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .