2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சவுதி தாக்குதலாளிக்கு அல்-கொய்தா தொடர்புகள்’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க கடற்படைத் தளமொன்றில் மூன்று ஐக்கிய அமெரிக்கர்களை கடந்தாண்டு டிசெம்பர் கொன்ற சவுதி அரேபிய இராணுவ மாணவன், அல்-கொய்தாவுடன் நீண்டகால தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், ஐக்கிய அமெரிக்காவுக்கு வர முன்னரே தாக்குதலொன்றைத் திட்டமிட்டதாக ஐக்கிய அமெரிக்க நீதி அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவிலுள்ள பென்சகோலா கடற்படை விமானத்தளத்தில் சவுதி அரேபிய வான்படை விமானி மாணவன் மொஹமட் அல்ஷம்ரானியால் கடந்தாண்டு டிசெம்பர் ஆறாம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலானது ஆண்டுக்கணக்கான திட்டமிடல், தயாராதலின் முடிவு என புலன்விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளர் கிறிஸ்தோபர் ரே தெரிவித்துள்ளார்.

குறைந்தது 2015ஆம் ஆண்டளவிலேயே குறித்த மாணவன் தீவிரமயப்பட்டதைக் காண்பிக்கும் ஆதாரம் மறைகுறியாக்கப்பட்ட அலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் இவர் யேமனைத் தளமாகக் கொண்ட அரேபிய வளைகுடாவிலுள்ள அல்-கொய்தாவிலிருந்தான மோசமான இயக்குநர்களுடன் இணைந்திருந்ததாக கிறிஸ்தோபர் ரே மேலும் கூறியுள்ளார்.

வகுப்பறைக் கட்டடமொன்றில் நடந்த குறித்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று கடற்படைவீரர்கள் இறந்ததுடன், எட்டுப் பேர் காயமடைந்ததுடன், குறித்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

தாக்குதலுக்கு அரேபிய வளைகுடாவிலுள்ள அல்-கொய்தா உரிமை கோரியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .