2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிரியப் படையால் ஐ.எஸ்க்கெதிரான இறுதி யுத்தம் ஆரம்பம்

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கொண்டுள்ள அதன் இறுதி இடத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை விரட்டியடிப்பதற்கான இறுதி யுத்தத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் நேற்றுத் தெரிவித்துள்ளன.

சிரியாவையும் அதன் அயல் நாடான ஈராக்கின் பெரும்பாலான பகுதிகளை 2014ஆம் ஆண்டு கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, இஸ்லாமியப் பேரரசொன்றை பிரகடனப்படுத்தியதுடன் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தையும் அமுல்படுத்தியது. எவ்வாறாயினும், பல வலிந்த இராணுவ முன்னெடுப்புகளைத் தொடர்ந்து, ஒரு சில பகுதிகளில் மாத்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு எஞ்சியுள்ளது.

இந்நிலையிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானத் தாக்குதல்களால் ஆதரவளிக்கப்பட்ட குர்திஷ், அரேபியக் கூட்டணி, சிரியாவின் கிழக்கு மாகாணமாக டெய்ர் எஸோரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை அண்மைய மாதங்களில் சுற்றி வளைத்திருந்தது.

அந்தவகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமுள்ள இறுதி நான்கு சதுர கிலோமீற்றர் பரப்பை கைப்பற்றுவதற்கான மோதலை பொதுமக்கள் வெளியேறுவதற்காக ஒரு வாரத்துக்கு மேலாக இடைநிறுத்தியிருந்த தாம், நேற்று  மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள சிரிய ஜனநாயகப் படைகளின் பேச்சாளர் முஸ்தபா பாலி, “மோதல் ஆரம்பித்துள்ளது. வரும் நாட்களில் மோதல் முடிவுக்கு வரும்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, 600 வரையான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் இருப்பதாக மேலும் முஸ்தபா அலி தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாட்டவர்கள் என்பதோடு, நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொள்வதாக சிரிய ஜனநாயகப் படைகளின் போராளிகள் தெரிவித்துள்ளதோடு, மோதல் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் எஞ்சியிருப்போர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் எனவும் முஸ்தபா பாலி மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .