2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனா தொடர்பில் ட்ரம்ப்புக்கு வெறுப்பு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா தொடர்பில் சீனா நடவடிக்கை எடுக்காது இருப்பது தொடர்பிலும் இரு தரப்பு வியாபாரப் பிரச்சினைகள் தொடர்பிலும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெறுப்படைந்துள்ளதாகவும், சீனாவுக்கெதிரான வியாபார நடவடிக்கைகள் குறித்து கருத்திற் கொள்வதாகவும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் மூவர் தெரிவித்துள்ளனர்.   

உருக்கு இறக்குமதிகள் மீதான வரிகள் உட்பட, தெரிவுகளை, ஜனாதிபதி ட்ரம்ப் ஆராய்ந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் உருக்குத் தொழிற்துறையால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆய்வொன்றின் அங்கமாக, உருக்கு இறக்குமதிகள் மீது வரிகளை விதிப்பது தொடர்பில் கருத்திற் கொள்வதாக, வர்த்தகச் செயலாளர் வில்புர் றொஸ் ஏற்கெனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அமெரிக்கத் தொழிற்துறையையும் அமெரிக்கப் பணியாளர்களையும் பாதுகாக்கும் செயற்பாட்டையே, ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொள்ளவதாக, ஐக்கிய அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   

சந்தை விலையை விடக் குறைவான விலையைக் கொண்டிருப்பதன் காரணமாக விதிக்கப்பட்டுள்ள வரி, சந்தையில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை சரியாக்குவதற்கான வரி ஆகியவற்றுக்குள் சீன உருக்கு ஏற்கெனவே உள்ளாவதால், ஐக்கிய அமெரிக்க சந்தையில், சிறியளவிலான பங்கையே, சீனா கொண்டுள்ளது.   

எவ்வாறெனினும், சீனாவுக்கெதிராக, ஏதும் நடவடிக்கைகளை, ஜனாதிபதி ட்ரம்ப் எடுப்பாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது. எது எவ்வாறாயினும், இந்த வாரம், முடிவேதும் எடுக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக, சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   

வடகொரியா விடயத்தில், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பொன்றை சீனாவுக்கு வழங்கியதாக, ஜனாதிபதி ட்ரம்ப் உணருவதாகவும், ஆனால், போதுமானளவு முடிவுகளைக் காணவில்லை என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .