2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டமஸ்கஸ்ஸில் 2 வாரங்களில் 179 பேர் பலி

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர்ப் பகுதியான கிழக்கு கௌட்டா பகுதியில், அரசாங்கத்தாலும் ரஷ்யாவாலும் மேற்கொள்ளப்படும் தாக்கதல்களின் விளைவாக, 2 வாரங்களுக்கும் சிறிது அதிகமான காலப்பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 179ஆக உயர்வடைந்துள்ளது.

போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு கௌட்டாவைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையை, டிசெம்பர் 29ஆம் திகதி, சிரிய அரசாங்கப் படைகள் ஆரம்பித்தன. இந்நடவடிக்கைக்கு, ரஷ்ய போர் விமானங்கள் ஆதரவளிக்கின்றன.

விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் ஆர்ட்டிலறி தாக்குதல்கள் மூலமாகவும் ஆதரவு வழங்கப்பட, சிரியப் படையினர் முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களைத் திரட்டிவரும் மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், 179 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரையான தகவல்களே கிடைத்துள்ள நிலையில், உயிரிழந்தோரில் 51 சிறுவர்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் அறிவிக்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு முதல், சிரிய அரசாங்கப் படையினரால் முற்றுகையிடப்பட்டு உள்ள கிழக்கு கௌட்டா பகுதியில், 400,000 பொதுமக்கள் வகிக்கின்றனர். எனவே, அப்பகுதி மீதான இராணுவ நடவடிக்கை, அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது.

அத்தோடு, இப்பகுதிக்கான உதவிப் பொருட்கள் செல்வதை சிரிய அரசாங்கம் தடுக்கும் நிலையில், அங்கு மனிதாபிமான நெருக்கடிக்கான ஆபத்து உள்ளது எனவும், போஷாக்கு இன்மையால் மக்கள் வாடுகின்றனர் எனவும், ஐ.நா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .