2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கிறார் மலாலா

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்களிடமிருந்து, சிறு பிள்ளைகளைப் பிரித்து, தனியாக வைக்கும், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைத் திட்டத்தை, நொபெல் பரிசு வென்ற மலாலா யூசப்ஸாய் விமர்சித்துள்ளார். அத்திட்டத்தை அவர், “கொடூரமான திட்டம்” என வர்ணித்துள்ளார்.

சிறுமிகளின் கல்விக்காகப் போராடியமையின் காரணமாக, பாகிஸ்தானில் வைத்துத் தலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா, இப்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பதோடு, தென்னமெரிக்க நாடுகளுக்கான விஜயமொன்றை, தற்போது மேற்கொண்டுள்ளார். சிறுமிகளின் கல்வி வாய்ப்பை ஊக்குவிப்பதே அவரது நோக்கமாகும்.

குடும்பங்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் திட்டத்தை, ஐ.அமெரிக்கா ஏற்கெனவே கைவிட்டுள்ள போதிலும், ஏற்கெனவே பிரிக்கப்பட்ட பிள்ளைகளில் கணிசமானோர், குடும்பங்களுடன் இன்னமும் இணைக்கப்படவில்லை.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மலாலா, “இது கொடூரமானது. இது நீதியற்றது. இது மனிதாபிமானமற்றது. எவரும் அதை எவ்வாறு செய்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. அப்பிள்ளைகள், பெற்றோருடன் இணைக்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, இவ்வாண்டு இடம்பெற்ற உலக பொருளாதார மன்றத்திலும், ஜனாதிபதி ட்ரம்ப் மீது, கடுமையான விமர்சனங்களை, மலாலா முன்வைத்திருந்தார். குறிப்பாக, பெண்களின் உரிமை தொடர்பான விடயத்தில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் அடைவுகளை, அவர் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

இன்னமும் கல்விகற்றுவரும் மலாலா, அரசியல் விடயங்களில் நேரடியான தலையீடுகளை மேற்கொள்வதில்லை என்ற போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப் மீது அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள், முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .